அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்
எனக்காய் எங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகாரப் பலியானீர்           – அன்பே

காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே     – அன்பே

அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதய்யா            – அன்பே

நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே – எல்லா
மறுரூபம் ஆகணுமே       – அன்பே

 



anbe kalvari anbe
ummaib barkkaiyile
en ullam udaiyudhabba

thakam thakam enrir
enakkay engki ninrir
bavangkal sumanththir – engkal
parikarab paliyanir           – anbe

kayangkal barkkinren
kannir vadikkinren
thuya thiru irathdhame
thudikkum thayullame     – anbe

anaikkum karangkalile
aanikala suvami
ninaiththub barkkaiyile
nenjcham urukudhayya            – anbe

nenjsile oor uurru
nathiyay bayudhayya
manidharkal muzkanume – ella
marurupam aakanume       – anbe